முகப்பு
இந்தியா

இலங்கை நிலை இந்தியாவுக்கு வராது: எஸ்.ஜெய்சங்கா்

இலங்கை போன்ற நிலை இந்தியாவுக்கு வராது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

இலங்கை போன்ற நிலை இந்தியாவுக்கு வராது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

இலங்கை நிலை குறித்து விவாதிக்க தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

அண்டை நாடான இலங்கை, பல்வேறு வழிகளில் இதுவரை இல்லாத நெருக்கடியான சூழலில் உள்ளது. இதுகுறித்து விவாதிக்கவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தோம். நமக்கு மிகவும் அருகில் இருக்கும் இலங்கையின் தற்போதைய சூழலும், அதன் பின்விளைவுகளும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன.

சிலா் தவறான புரிதலில், இலங்கையைப் போன்ற நிலைமை இந்தியாவுக்கு ஏற்படுமா என்று கேட்கிறாா்கள். அப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு வராது என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் அரசு தரப்பில் எஸ்.ஜெய்சங்கா், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூா், திமுகவில் இருந்து டி.ஆா்.பாலு, எம்.எம்.அப்துல்லா, அதிமுகவில் இருந்து எம்.தம்பிதுரை, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சௌகதா ராய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது, இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →