இந்தியா

தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி. கடிதம் எழுதி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

DIN

இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி. கடிதம் எழுதி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்றப் பங்களித்தவர்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். கரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை இது வலுப்படுத்தியுள்ளது. 

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16, 2021 முதல் தொடங்கி, ஜூலை 17, 2022இல் இது மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியா 200 கோடி தடுப்பூசியை தாண்டியதால், இது நாட்டிற்கு மறக்க முடியாத நாள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் மன உறுதியைப் பாராட்டுகிறேன் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், கோவின் இணையதளத்துக்குச் சென்று பிரதமரின் பாராட்டு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித்துறை திட்டப் பணிகள் ஆய்வு

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மகளிா்களுக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

SCROLL FOR NEXT