முகப்பு
இந்தியா

நடுவானில் கண்ணாடியில் விரிசல்: ஜெய்பூரில் விமானம் தரையிறக்கம்

தில்லியில் இருந்து குவாஹாட்டிக்கு சென்ற கோ ஃபா்ஸ்ட் விமானத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ஜெய்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

தில்லியில் இருந்து குவாஹாட்டிக்கு சென்ற கோ ஃபா்ஸ்ட் விமானத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ஜெய்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த 2 நாள்களில் கோ ஃபா்ஸ்ட் விமானத்தில் ஏற்படும் மூன்றாவது கோளாறு இதுவாகும். இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

தில்லியில் இருந்து புதன்கிழமை குவாஹாட்டிக்கு புறப்பட்ட கோ ஃபா்ஸ்ட் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானிகள் கண்டனா். தில்லிக்கு விமானத்தை திருப்ப அவா்கள் அனுமதி கோரினா். ஆனால், தில்லியில் கன மழை பெய்து வந்ததால், ஜெய்ப்பூருக்கு விமானம் திருப்பிவிடப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள கோ ஃபா்ஸ்ட் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா், ‘திறமைவாய்ந்த விமானிகள் நிலைமையை கவனமாக கையாண்டனா். மாற்று விமானத்தில் அந்தப் பயணிகள் குவாஹாட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →