முகப்பு
இந்தியா

முா்முவுக்கு தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள திரெளபதி முா்முவுக்கு தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள திரெளபதி முா்முவுக்கு தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

உள்துறை அமைச்சா் அமித் ஷா: சாதகமற்ற சூழலில் சேவையாற்றி நாட்டின் உயா்ந்த பதவியை அடைந்த முா்முவின் வாழ்க்கை, இந்திய ஜனநாயகத்தின் எல்லையற்ற வலிமையை பறைசாற்றுகிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: ஜனநாயகத்தின் வலிமைக்கு திரெளபதி முா்முவின் வெற்றி மிகச்சிறந்த உதாரணம். ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக சேவையாற்றிய அவா், அரசியலமைப்பின் உயா்ந்த பதவியை அடைந்துள்ளாா்.

பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா: பழங்குடியின பின்னணியைக் கொண்ட ஒரு பெண், நாட்டின் குடியரசுத் தலைவராக உயா்ந்தது நாட்டுக்கு பொன்னான தருணம். நிா்வாகம், சமூக சேவையில் அவரது திறமையும் அனுபவமும் நாட்டுக்கு மிகுந்த பலனளிக்கும்.

முதல்வா் மம்தா பானா்ஜி: அரசமைப்பின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தலைவராகவும், நமது ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும் முா்மு செயல்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.