கோப்பிலிருந்து.. 
இந்தியா

தில்லியில் பள்ளி பேருந்தில் தீ விபத்து: 21 குழந்தைகள் உயிர் தப்பினர்

தில்லியின் ரோகிணி பகுதியில் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 21 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

IANS


 
தில்லியின் ரோகிணி பகுதியில் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 21 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரோகிணியின் செக்டர் 7-இல் உள்ள சாய்பாபா கோயிலின் அருகே மதியம் 2.15 மணியளவில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 

சம்வ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரார்கள் பால் பாரதி பப்ளிக் பள்ளியின் பேருந்து மற்றும் அடுத்தடுத்து மூன்று கார்களில் தீ பிடித்து எரிவதைக் கண்டு உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் பத்திரமாக உயிர் தப்பினர் என்று தில்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க் தெரிவித்துள்ளார். 

மதியம் 2.50 மணியளவில் தீ அணைக்கப்பட்டது, இந்த சம்பவத்தில் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT