இந்தியா

அமலாக்கத்துறை முன் ஆஜரானார் சோனியா காந்தி

DIN

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார்.

சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதுபோல, ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருந்த சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா்.

கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்குக் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையைக் கடந்த மாத இறுதியில் 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, சோனியா காந்தி இன்று ஆஜராகியுள்ளார். சோனியா காந்தியுடன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிரியங்கா காந்தியும் வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT