இந்தியா

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை 3 மணிநேரம் விசாரணை

DIN

புதுதில்லி: நேஷனல்  ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்திய  3 மணி நேர இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது.

சோனியா காந்தியிடம் பகல் 12.30 மணி அளவில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார்.

சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, சோனியா காந்தி இன்று ஆஜராகியுள்ளார். சோனியா காந்தியுடன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிரியங்கா காந்தியும் வந்துள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு வரும் ஜூலை 25 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைக்கால ஜாமீன்: போதிய விளக்கத்தை அளிக்க ஹேமந்த் சோரனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மம்தா மீது அவதூறு: பாஜக வேட்பாளா் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் ஒருநாள் தடை

விண்வெளி கருந்துளையில் உயா் ஆற்றல் எக்ஸ்-ரே சீரற்ற நிலையில் வெளியேற்றம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

எதிரியால் பாராட்டப்பட்ட ராகுல் நாட்டை ஆள அனுமதிக்கலாமா?

மடவாா் வளாகம் கோயிலில் ஜூன் 2- இல் குடமுழுக்கு

SCROLL FOR NEXT