இந்தியா

ரூ.600 கோடி சொத்தை அரசுக்கு நன்கொடையாக அளித்த உ.பி. மருத்துவர்

IANS

மொராதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்தரப் பிரதேச அரசுக்கு தனது முழு சொத்தையும் நன்கொடையாக அளித்துள்ளார். 

மருத்துவரின் மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.600 கோடி ஆகும். இவர் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் கோயல்,

25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

பொது முடக்கத்தின் போது மொராதாபாத்தின் 50 கிராமங்களைத் தத்தெடுத்து, மக்களுக்கு இலவச வசதிகளை கோயல் வழங்கியுள்ளார். மேலும் மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி பாட்டீல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உள்பட நான்கு முறை குடியரசுத் தலைவரால் கௌரவிக்கப்பட்டார்.

அரவிந்திற்கு அவரது மனைவி ரேணு கோயல் தவிர, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT