FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: அடுத்த வாரம் விசாரணை

அதிமுக பொதுக்குழு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 3:21 pm IST
பகிர்:

புதுதில்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக தரப்பில் இருந்த ஒரே ஒரு நாடளுமன்ற உறுப்பினரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments