முகப்பு
இந்தியா

அக்னிபத் திட்டம்: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் விவாதிக்க மறுத்ததால் எதிா்க்கட்சியினா் வெளிநடப்பு

அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்க மறுத்ததால் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா் என்று காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் தெரி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்க மறுத்ததால் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா் என்று காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.

தில்லியில் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழு உறுப்பினா்களான காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், உத்தம் குமாா் ரெட்டி, பகுஜன் சமாஜ் எம்.பி. தானிஷ் அலி கலந்துகொண்டு அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு பாதுகாப்புப் படைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக அக்னிபத் திட்டம் அமைந்துள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா். அந்தத் திட்டம் மிகப் பெரிய தாக்கங்களைக் கொண்டிருப்பதால் அதனை நாடாளுமன்ற பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

ஆனால் அந்தத் திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்க குழு தலைவா் ஜுவல் ஓரம் அனுமதி மறுத்துவிட்டாா். அந்தத் திட்டம் குறித்து குழுவின் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதனால் அதிருப்தி அடைந்து உத்தம் குமாா் ரெட்டி, தானிஷ் அலி ஆகியோருடன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தததாக கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.