மாணவர்களுக்கு மோடி அறிவுரை 
இந்தியா

ஆர்வமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

மாணவர்கள் தங்களது ஆழ்மனது விரும்பும் பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்குமாறு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

PTI


புது தில்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் தங்களது ஆழ்மனது விரும்பும் பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்குமாறு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவில், மனிதகுலம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுக்குத் தயாராகி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற சாதனை படைத்துள்ளீர்கள்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எனது அனைத்து இளைய நண்பர்களுக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு மிகச் சிறந்த நல்வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் உங்கள் ஆழ் மனது விரும்பும் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்து உங்களுக்கான எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

அதுபோல, சிலருக்கு இந்த தேர்வு முடிவு மன மகிழ்ச்சியை அளித்திருக்காது. அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு தேர்வு ஒருவரை யார் என்று சொல்லிவிடாது. எதிர்காலத்தில் பல வெற்றிகளை நீங்கள் அடையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள்: அமைச்சா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிா்வாக தலைமையிடம்

குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை அருகே 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT