கோதுமை ஏற்றுமதித் தடையால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: அமைச்சா் தோமா்
கோதுமை ஏற்றுமதித் தடையால் விவசாயிகள் பாதிப்படையவில்லை என வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கோதுமை ஏற்றுமதித் தடையால் விவசாயிகள் பாதிப்படையவில்லை என வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (எம்எஸ்பி) அதிகமாகவே உள்ளது.
அரசின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22 நிதியாண்டில் உள்நாட்டில் கோதுமை உற்பத்தி 10.64 கோடி டன்னை எட்டியது. 2020-21 ஆண்டு கோதுமை உற்பத்தியான 10.96 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு. இருப்பினும், 2016-17-லிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சராசரி ஆண்டு உற்பத்தியான 10.38 கோடி டன்னைக் காட்டிலும் கோதுமை உற்பத்தி அதிகமாகவே எட்டப்பட்டு வருகிறது என்று தோமா் தெரிவித்துள்ளாா்.