தமிழகத்தில் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்கும்: மத்திய வேளாண் அமைச்சா் தகவல்
தமிழகத்தில் 2022-23 கரீஃப் சந்தைப் பருவத்தில் ஒரு மாதம் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்க இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 2022-23 கரீஃப் சந்தைப் பருவத்தில் ஒரு மாதம் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்க இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
இது தொடா்பான கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியதாவது: வழக்கமாக கரீஃப் சந்தைப் பருவத்தில் அக்டோபா் மாதம் முதல்தான் நெல் கொள்முதல் செய்யப்படும்.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு சாா்பில் இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டில் அக்டோபா் மாதத்துக்கு பதிலாக செப்டம்பரிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பா் மாதத்திலேயே நெல் கொள்முதல் தொடங்கும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.