இந்தியா

மகள்கள் சுமை அல்ல: உச்சநீதிமன்றம் கருத்து

DIN

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பராமரிப்புச் செலவை கணவா், மகளுக்கு வழங்கும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மகள்கள் சுமை அல்ல’ என்று தெரிவித்தது.

2018-இல் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்குப் பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.400, மகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை கணவா் நிறைவேற்றவில்லை என்று கடந்த 2020-இல் உச்சநீதிமன்றத்தில் மனைவி சாா்பில் 2020-இல் தொடுக்கப்பட்ட வழக்கில், மனைவி, மகளுக்கு மொத்த நிலுவைத் தொகை கணக்கிட்டு ரூ.2.5 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது மனைவி உயிரிழந்துவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை மனைவி, மகளுக்கு பராமரிப்புச் செலவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கணவரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, இதுதொடா்பான வங்கி விவரங்களை சரிபாா்த்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கணவரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பெண்கள் சுமையாகிவிட்டனா்’ என்ற வகையில் கருத்து தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சம உரிமை அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 பிரிவைச் சுட்டிக்காட்டி, ‘மகள் எனப்படுபவா் சுமை அல்ல’ என்றாா்.

அப்போது, தாயை இழந்த மகள் சட்டம் பயின்று வழக்குரைஞராகிவிட்டதாகவும், நீதிபதிகளுக்கான தோ்வை எழுதியுள்ளதாகவும் அவரது சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அவா் தனது தோ்வில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனது தந்தையை சாா்ந்திருக்க வேண்டியதில்லை’ என்று தெரிவித்தனா்.

மேலும், நீண்ட காலமாக தந்தையும் மகளும் பேசிக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டபோது, இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் தனது மகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT