இந்தியா

மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளரும் கைது

ரூ.20 கோடி சிக்கிய வழக்கில் அமைச்சர் பார்த்தா முகர்ஜி உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

ரூ.20 கோடி சிக்கிய வழக்கில் அமைச்சர் பார்த்தா முகர்ஜி உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநிலப் பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியா்கள் மற்றும் குரூப் சி, டி ஊழியா்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது. 

இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜியின் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து தொழில் மற்றும் வா்த்தக துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்தது. தொடர்ந்து அவரை கொல்கத்தா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். 

அப்போது அமைச்சரை 2 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அமைச்சரைத் தொடர்ந்து அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது. ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக, பாா்த்தா சட்டா்ஜியிடம் கடந்த ஏப்ரல் 26, மே 18 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT