இந்தியா

ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

PTI

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய ஒருநாள் உள்ள நிலையில், அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்பான பிரியாவிடை வழங்கவுள்ளனர். 

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று மாலை நடைபெறும் பிரியாவிடை விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோவிந்திடம் ஒரு நினைவுச் சின்னத்தை ஓம்பிர்லா வழங்க உள்ளார். அதில் எம்.பி.க்கள் கையொப்பமிட்ட நினைவுச் சின்னம் மற்றும் கையெழுத்துப் புத்தகமும் பதவி விலகும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்.

திரௌபதி மும்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உச்ச அரசியலமைப்பு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடியின தலைவர் முர்மு, திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு, ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.

அதில், மத்திய அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT