முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விருந்தளித்த குடியரசுத் துணைத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளித்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளித்து கௌரவித்தார்.

ராம்நாத் கோவிந்த் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்து தெரிவித்த வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் தனது பரந்த பார்வை மற்றும் அன்பு நிறைந்த எளிமையின் மூலம் தாம் வகித்த பதவிக்கு பெருமை சேர்த்ததாக கூறினார். 

கடந்த ஐந்தாண்டுகளில் பல இனிமையான நினைவுகளை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் வளர்ச்சிக்காக குடியரசுத் தலைவர் கோவிந்துடன் இணைந்து பணியாற்றியது தமக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.