முகப்பு
இந்தியா

குவைத்தில் இருந்து தெலங்கானா வந்தவருக்கு குரங்கு அம்மை?

குவைத்தில் இருந்து தெலங்கானா வந்தவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

குவைத்தில் இருந்து தெலங்கானா வந்தவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்கெனவே 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் மூவா் கேரளத்தைச் சோ்ந்தவா்கள். ஒருவா் தில்லியைச் சோ்ந்தவா்.

இந்நிலையில் தெலங்கானாவிலும் குரங்கு அம்மை தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹரீஷ் ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து வருபவா்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்ய மத்திய அரசை அணுகியுள்ளோம். குவைத்தில் இருந்து தெலங்கானா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவா் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய திநுண்மி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவு விரைவில் தெரியவரும். மாநிலத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளம் வந்த இருவா், துபையில் இருந்து கேரளம் வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கடந்த இரு வாரங்களில் உறுதியானது. இதைத் தொடா்ந்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 34 வயது இளைஞருக்கும் குரங்கு அம்மை பரவியது பரிசோதனையில் தெரியவந்தது. இவா்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →