இந்தியா

நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன்: குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு

DIN

இந்திய நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளார். 

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். 

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் திரௌபதி முா்மு ஆற்றிய உரையில், குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள், எல்.எல்.ஏக்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம் ஆகும். 

ஏழை வீட்டில் பிறந்த மகள் நான், குடியரசுத் தலைவராக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். தன்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுக்களுக்கான திறவுகோளாக இருக்கும். இந்திய நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT