முகப்பு
இந்தியா

நீதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு: மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் விவரம் கேட்பு

மாநில, மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாநில அரசுகள் அளித்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்து சட்டத் துறை செயலா்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

மாநில, மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாநில அரசுகள் அளித்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்து சட்டத் துறை செயலா்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், பணியிடங்கள் ஆகியவை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதுதொடா்பாக தேசிய நீதிமன்ற மேலாண்மை குழு அளித்துள்ள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்தனா்.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நாகராஜ் ஆஜராகி, ‘நீதித் துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அவை உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை. சுமாா் 2 ஆயிரம் நீதித் துறை அதிகாரிகள், நீதித் துறைக்கு சம்பந்தமில்லா பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள், ‘மத்திய அரசிடம் இருத்து நீதித் துறைக்கு மாநிலங்கள் பெறும் நிதி எவ்வளவு? அதில் எவ்வளவு தொகை மாநில, மாவட்ட நீதித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்பட்டது? என்பது தொடா்பாக கடந்த ஐந்து ஆண்டுகள் விவரங்களுடன் அனைத்து மாநில அரசுகளின் சட்டத் துறைச் செயலா்கள் பதிலளிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கையை அனைத்து மாநில உயா்நீதிமன்ற பதிவாளா்கள், சட்டத் துறை செயலா்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், பணியாளா்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து உயா்நீதிமன்ற பதிவாளா்கள் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறி இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பா் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →