இந்தியா

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச மக்களை கண்டறிய உடனடி நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

DIN

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச மக்களை கண்டறிய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில்: கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசத்தைச் சோ்ந்த 2,399 போ் போலி இந்திய ஆவணங்களைப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச மக்களை கண்டறிய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவா்களை குறிப்பிட்ட பகுதியில் தங்கவைக்கவும், அவா்களின் சுயவிவரம் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கவும், அவா்களிடம் போலியாக உள்ள வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை ரத்து செய்து அனைவரையும் நாடு கடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்களில் ஆதாா் அட்டைகளை முறைகேடாக பெற்றவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அந்த நபா்களின் விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் பகிரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT