இந்தியா

தடுப்புக் காவல் மையத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை!

DIN

தில்லியில் தடுப்புக் காவல் மையத்திலும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இன்று காலை விஜய் செளக் வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

அவர்களை தடுத்த காவல்துறையினர் ராகுல் காந்தி உள்பட 50 எம்.பி.க்களையும் கைது செய்து கிங்ஸ்வே காவல் தடுப்பு மையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், காவல் தடுப்பு மையத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் ஒன்றாக அமர்ந்து, விலை உயர்வு, அக்னிபாத், ஜிஎஸ்டி, தேசிய பாதுகாப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த காணொலி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT