இந்தியா

கார்கில் போர் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு மரியாதை

கார்கில் வெற்றி தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். 

ANI

கார்கில் வெற்றி தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். 

திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு, இந்த நாளை அசாதாரண வீரத்தின் சின்னம் என்று குறிப்பிட்டார். 

இதுகுறித்து அவரது சுட்டுரை பக்கத்தில், 

கார்கில் விஜய் திவாஸ் நமது ஆயுதப் படைகளின் அசாதாரண வீரம் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம். அன்னையைக் காக்க தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அனைத்து நாட்டு மக்களும் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எப்போது கடமைப்பட்டிருப்பார்கள். ஜெய் ஹிந்த்!  என்று குடியரசுத் தலைவர் மும்மு பதிவிட்டுள்ளார். 

கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.  இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT