இந்தியா

'ஏஜென்சிகளைப் பயன்படுத்தி மாநிலங்களைக்  கைப்பற்றுவதுதான் பாஜகவின் வேலை' - மம்தா பானர்ஜி தாக்கு

DIN

மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களைக் 
கைப்பற்றுவதுதான் பாஜகவின் வேலை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். 

கொல்கத்தாவில் 'திடகார்க் வேகான்' என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் விழாவில் கலந்துகொண்ட மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: 

பாஜகவினருக்கு  வேறு வேலை இல்லை. மத்திய அரசிடம் உள்ள 3- 4 புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் வேலை. மகாராஷ்டிரத்தைக் கைப்பற்றியுள்ளனர், இப்போது ஜார்க்கண்ட், ஆனால் மேற்கு வங்கம் அவர்களை தோற்கடித்துவிட்டது. முதலில் மேற்குவங்க புலியை எதிர்த்துப் போரிட வேண்டும். வங்காளத்தை உடைப்பது ஒன்றும் எளிதல்ல. 

2024-ல் பாஜக ஆட்சிக்கு வராது என்று நம்புகிறேன். இந்தியாவில் வேலையின்மை 40% அதிகரித்துவிட்டது. ஆனால், மேற்குவங்கத்தில் 45% குறைந்துள்ளது. 

ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மேற்குவங்க அரசுக்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும்போது தவறுகள் நிகழலாம். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், ஊடகங்கள், நீதிமன்றத்தின் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளன. மூத்த நீதிபதியும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். 

மேலும் இப்போது எதற்கு எதிராகவாவது நீங்கள் போராட்டம் நடத்தினால் எம்.பிக்களாக  இருந்தாலும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு விடுவீர்கள் என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT