என் வீட்டை இப்படித்தான் பயன்படுத்தினார்.. பார்த்தா சாட்டர்ஜி குறித்து அர்பிதா சொன்னது என்ன? 
இந்தியா

என் வீட்டை இப்படித்தான் பயன்படுத்தினார்.. பார்த்தா சாட்டர்ஜி குறித்து அர்பிதா சொன்னது என்ன?

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, தனது வீட்டை சிறிய வங்கியாகப் பயன்படுத்தியதாக நடிகை அர்பிதா முகர்ஜி கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, தனது வீட்டை சிறிய வங்கியாகப் பயன்படுத்தியதாக நடிகை அர்பிதா முகர்ஜி கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அர்பிதா முகர்ஜி, அமலாக்கத் துறை விசாரணையில் அதுபோன்று எதையும் தெரிவிக்கவில்லை என்று மறுத்திருக்கும் அவரது வழக்குரைஞர், தங்களது விசாரணையில் கிடைக்கும் தகவல்களை அமலாக்கத் துறையினர் ஊடகங்களுக்கு கசிய விடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22இல் தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள பாா்த்தா சாட்டா்ஜியின் நெருங்கிய நண்பரான நடிகை அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இந்த சோதனையின் போது ஏராளமான நகைகளையும், ரூ. 20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக பாா்த்தா சாட்டா்ஜியும், அா்பிதா முகா்ஜியும் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அவா்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அர்பிதாவிடம் நடத்திய விசாரணையில், தனது வீட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுக்க முழுக்க பார்த்தாவுடையதுஎன்றும், அவர்களுடைய ஆள்கள் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவர், ஒவ்வொரு வாரமும் அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை பார்த்தா தனது வீட்டுக்கு வருவார் என்றும், தனது வீட்டை அவர் ஒரு சிறிய வங்கி போல நடத்தி வந்ததாகக் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடா்ச்சியாக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரும், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்தவருமான எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவருக்கும் சம்மன் அனுப்பினர்.

ஆசிரியா் பணி நியமன விவகாரத்தில் தொடா்புடையவா்களாக கருதப்படுபவா்களின் குடியிருப்புகளில் கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது, மாணிக் பட்டாச்சாா்யாவின் குடியிருப்பு வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT