இந்தியா

மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம்

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

DIN

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 23ல் அவரை கைது செய்தனர். 

தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ள பார்த்தா சட்டர்ஜியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனல் கோஷ் கூறியிருந்தார். 

இந்நிலையில் மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தொழில், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை புனரமைப்பு துறை ஆகிய துறைகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பார்த்தா சட்டர்ஜியை நீக்கி என்னுடைய கட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பல திட்டங்கள் உள்ளன. ஆனால், அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் வசூல் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தலா? பாஜக நிர்வாகி சூசகம்!

காஞ்சிபுரத்தில் கிராம உதவியாளர்கள் சாலை மறியல்: 183 பேர் கைது

விஜய்யை ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம்: செல்லூர் ராஜு

எப்ஸ்டீனும் நரவணேயும்! பிரதமர் பதிலில்லை, தொடர்ந்து முடங்கும் மக்களவை!

SCROLL FOR NEXT