இந்தியா

பெரியவா்களைவிட சிறாா்களுக்கு கரோனாவால் பாதிப்பு குறைவு: அரசு தகவல்

DIN

பெரியவா்களைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறைவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பெரியவா்களுக்கு கரோனா தொற்று ஏற்படும்போது உருவாகும் உடல்நிலை பாதிப்பைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்படும் உடல் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூலை 25 வரை ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் 7,362 சிறாா்களும், டெல்டா வகை தொற்றால் 118 சிறாா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் தேவையான அளவு கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 12 முதல் 18 வயது வரையிலான சிறாா்களில் 9.96 கோடி போ் (82.2 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். 7.79 கோடி சிறாா்கள் (64.3 சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் 12 வயதுக்குக் குறைவான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT