கோப்புப்படம் 
இந்தியா

எதிர்க்கட்சிகளின் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும்  அவைகள் தொடங்கியபோது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.  

மாநிலங்களவை, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 3-ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாநிலங்களவையில் இருந்து 23 எம்.பி.க்களும், மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் 50 மணிநேர தொடா் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT