இந்தியா

குடியரசுத் தலைவர் முர்முவுடன் அமித்ஷா சந்திப்பு 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

PTI

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தார்.

மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் டாக்டர் மகேந்திர முஞ்ச்பாரா மற்றும் ஜான் பர்லா ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் தொடர்ந்து அமளியை ஏற்படுத்திவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார். 

மக்களவையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறிய கருத்துக்கு எதிர்ப்புகள் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற அவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT