வீட்டுக்குள் ரூ.27 கோடி; ஆனால் பராமரிப்புக் கட்டணம் பாக்கி வைத்த அர்பிதா  
இந்தியா

வீட்டுக்குள் ரூ.27 கோடி; ஆனால் பராமரிப்புக் கட்டணம் பாக்கி வைத்த அர்பிதா 

அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான கிளப் டவுன் குடியிருப்பின் வாசலில், பராமரிப்புக் கட்டணம் ரூ.21 ஆயிரம் நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

DIN

கொல்கத்தா: அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ரூ.27.9 கோடி பறிமுதல் செய்த பெல்காரியாவில் உள்ள அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான கிளப் டவுன் குடியிருப்பின் வாசலில், பராமரிப்புக் கட்டணம் ரூ.21 ஆயிரம் நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், எட்டு வங்கி அதிகாரிகள், சுமார் 13 முணி நேரமாக, நான்கு நோட்டு எண்ணும் கருவிகளில் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் அர்பிதாவின் வீட்டில் பறிமுதல் செய்த ரூ.27.9 கோடியை எண்ணி முடித்துள்ளனர். இதோடு சேர்த்து, அர்பிதாவுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் இருந்து மடடும் பறிமுதல் செய்த தொகை ரூ.49 கோடி என்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் ரூ.4.31 கோடி மதிப்பிலான தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வீட்டுக்குள் இருந்து அலிபாபா குகை போல கட்டுக்கட்டாக பணமும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த குடியிருப்பின் வாசலில், ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில்,  5வது பிளாக்குகான பராமரிப்புக் கட்டணம் ரூ.9,099ம், 2வது பிளாக்குகான நிலுவை ரூ.11,819ம் இருப்பதாகக் கூறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT