இந்தியா

ஹரியாணாவில் பெண்களுக்கு 36 மணி நேர இலவசப் பேருந்து பயணம்! எதற்கு தெரியுமா?

ரக்ஷாபந்தனையொட்டி பெண்களுக்கு 36 மணி நேர இலவசப் பேருந்து பயணத்தை பரிசாக அறிவித்துள்ளது ஹரியாணா அரசு. 

DIN

ரக்ஷாபந்தனையொட்டி பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை பரிசாக அறிவித்துள்ளது ஹரியாணா அரசு. 

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி, ஹரியாணா மாநிலத்தில் பெண்கள், அரசுப் பேருந்துகளில் 36 மணி நேர இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பெண்கள் இலவசமாக பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ரக்ஷாபந்தன் பரிசாக இது வழங்கப்படுவதாக ஹரியாணா அரசு கூறியுள்ளது. 

கடந்த ஆண்டும் இதேபோல பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை ஹரியாணா அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT