வருமான வரித் துறை 
இந்தியா

வருமான வரித் தாக்கல் செய்ய நாளை கடைசி: அபராதத் தொகை அறிவிப்பு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை(ஜூலை 31) கடைசி நாள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை(ஜூலை 31) கடைசி நாள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 4 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி வரையில் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை சார்பில் தெரிவித்திருந்தது.

தற்போதைய நிலையில் காலக்கெடு வழக்கம்போல் நீட்டிக்கப்படும் என்ற எதிா்பார்ப்பு பெரும்பாலான மக்களிடம் நிலவுவதால் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை சிறிது குறைவாக உள்ளது.

தற்போது கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளையுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமான வரித்  தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000, ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரித்  தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT