இந்தியா

5ஜி அலைக்கற்றை: 6-ஆவது நாளில் ரூ.1.50 லட்சம் கோடியைக் கடந்தது 

DIN

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1.50 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.
 
பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், " ஆறாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் அலைக்கற்றைகளை ஏலம் கோரியுள்ளன. 

"ஏலத்தில் அனைத்து அலைவரிசைகளுக்கும் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை 7-ஆவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,50 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ஆறாவது நாள் ஏலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமையும் ஏலம் தொடரும்' என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT