நாட்டில் புதிதாக 19,673 பேருக்கு கரோனா; 45 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,637 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 45 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாநாட்டில் புதிதாக 19,673 பேருக்கு கரோனா; 45 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,637 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 45 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,673 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 45 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (சனிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,408 ஆக இருந்தது. இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 19,673 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,40,19,811 ஆக அதிகரித்துள்ளது
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,676 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவீதமாக உள்ளது.
கரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 45 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,357 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,336 இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,43,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.