இந்தியா

வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி: பிரதமர் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணியின் உறுதித் தன்மையால் இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கினார். எனினும் அவரை விட ஒரு கிலோ எடையை கூடுதலாக தூக்கியதன் மூலம் நைஜீரியாவின் அதிஜாத் அதேனிக ஒலாரினோயே தங்கப் பதக்கம் வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ஹோம்பவுண்ட்!

ஈரான், ஆப்கன், மியான்மர் உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை! - அதிபர் டிரம்ப்

புது தில்லி போல சென்னையில் மூச்சுத் திணறும் நாள் வெகுதொலைவில் இல்லை!! செய்ய வேண்டியது?

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட டாப் - 10 வீரர்கள்!

அரசுப் பேருந்தின் டயர் வெடிப்பு: பயணிகள் உயிர் தப்பினர்!

SCROLL FOR NEXT