இந்தியா

எண்களை சரியாக கூறாத மாணவியை கொடூரமாக தாக்கும் ஆசிரியர்... வைரலாகும் அதிர்ச்சி விடியோ!

எண்களை தொடர்ந்து சரியாக கூறாத 9 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

DIN

எண்களை தொடர்ந்து சரியாக கூறாத 9 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேசம் மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமத்கெடா அரசுப் பள்ளி ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அழைத்து எழுத்து மற்றும் எண்களைத் தொடர்ந்து சரியாக கூறுமாறு கூறியுள்ளார். 

அந்த மாணவியும் 34 ஆவது எண் வரை சரியாக கூறியவர், பின்னர் 35 ஆவது எண்ணை கூறுவதில் தடுமாறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த அந்த ஆசிரியர் அந்த மாணவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

மாணவியின் கன்னத்தில் அடுத்தடுத்து கொடூரமாக தாக்கிய ஆசிரியர், பின்னர் மாணவி தலையின் பின்பகுதியில்  தாக்கியுள்ளார். தொடர்ந்து மாணவி தனது இடத்துக்கு சென்ற போது பின்வந்தவர் தொடர்ந்து தாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் மாணவியை கொடூரமாக தாக்கும் ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட கல்வி அதிகாரி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT