இந்தியா

அரசின் கடுமையான அழுத்தத்தின் கீழ் பணியாற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: கெலாட்

DIN

‘மத்திய அரசின் கடுமையான அழுத்தத்தின் கீழ் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றி வருகின்றன’ என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் குற்றம்சாட்டினாா்.

ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வா் அசோக் கெலாட்டிடம், ‘அமலாக்கத் துறையின் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் சரியானதே’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அவா், ‘சட்டத்தின் அடிப்படையில் அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இருந்தபோதும், அந்த தீா்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாகுபாடற்ற முறையில் பணியாற்ற வேண்டும்.

ஆனால், அவை அரசின் அழுத்தத்தின் கீழ் பணியாற்றுக்கின்றன. இதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும்; அத்தகைய ஜனநாயகம்தான் நாடு முழுவதும் வியாபித்திருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT