முகப்பு
பிகார் முதல்வர் நிதிஷ்குமார்
இந்தியா

‘பிகாரில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு’: முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்தியா

‘பிகாரில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு’: முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பிகார் முதல்வர் நிதிஷ்குமார்
பகிர்:

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தின் பாட்னாவில் புதன்கிழமை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நிதிஷ்குமார், “மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பிற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் பேசும் போது, “இது சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்ல. இந்தப் பணியில் சமூக ஆய்வாளர்கள் இடம்பெற வேண்டும். இதுதொடர்பாக அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மசோதா கொண்டுவர வலியுறுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக, ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ, ஏஐஎம்ஐஅம், விஐபி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

முழு கட்டுரையைப் படிக்க →