முகப்பு
இந்தியா

கேரளத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 1000-ஐ கடந்த கரோனா

கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு இன்று மீண்டும் 1000-ஐ கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு இன்று மீண்டும் 1000-ஐ கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

கேரளத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 1,197 ஆக இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து தொற்று விகிதம் 7.07 ஆக உள்ளது.

மே 23 முதல் 31 வரை கரோனா பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது. 

மேலும், மருத்துவச் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளத்தில் இந்த வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால், கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →