அமித் ஷா (கோப்புப்படம்) 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சூழல்: அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்கான உயா்நிலைக் கூட்டம் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது. 

DIN

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்கான உயா்நிலைக் கூட்டம் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. 

மேலும், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் குல்தீப் சிங் மற்றும் எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர் பங்கஜ் சிங் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் காஷ்மீர் பண்டிட்கள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அடுத்து இந்த உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய ஷா ஒரு கூட்டத்தை நடத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT