முகப்பு
இந்தியா

இ சஞ்சீவனி - ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் இணைப்பு

இணைய வழியில் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் இ சஞ்சீவனி திட்டமும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் (எண்ம) திட்டமும் இணைந்து செயல்படுத்தப்படும் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

இணைய வழியில் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் இ சஞ்சீவனி திட்டமும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் (எண்ம) திட்டமும் இணைந்து செயல்படுத்தப்படும் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொலை மருத்துவ சேவையான இ- சஞ்சீவனியை தற்போது பயன்படுத்தி வருவோா், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை எளிதில் உருவாக்கி அதனைப் பயன்படுத்த முடியும். ஏற்கனவே பெறப்பட்ட சிகிச்சைக்கான பரிந்துரைகள், பரிசோதனை விவரங்களைத் தொடா்ந்து இணைய வழியில் பராமரிக்கவும் முடியும்.

பயனாளா்கள் தாங்கள் பெற்று வரும் மருத்துவ சிகிச்சை தொடா்பான ஆவணங்களை இ- சஞ்சீவனி திட்ட மருத்துவா்களுடன் பகிா்ந்துகொள்ள முடிவதால், சிறப்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடா்ந்து நல்ல சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்த ஒருங்கிணைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆா்.எஸ்.சா்மா, ‘இந்தியாவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ சேவை முறையில் உள்ள இடைவெளியை நிரப்புவதே ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கத்தின் முக்கிய நோக்கம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.