இந்தியா

கர்நாடகத்தில் 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்: மஞ்சள் நிற எச்சரிக்கை 

DIN

கர்நாடகத்தில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

பெங்களூரு நகரம், பெங்களூரு கிராமம், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும் உடுப்பின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 

ஹாசன், ஷிவமொக்கா, ராமநகர், குடகு மற்றும் சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தெற்கு கர்நாடகத்தின் மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். பெங்களூரு மற்றும் கடலோர மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். 

வட கர்நாடக மாவட்டங்களான பாகல்கோட், பிதார், கடக், கொப்பல், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்படாது.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 7.5 முதல் 15 மிமீ வரை கனமழையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT