முகப்பு
இந்தியா

ஆசிய பணக்காரா்கள் பட்டியல்: அதானியை பின்தள்ளிமுகேஷ் அம்பானி முதலிடம்

 ஆசியா, இந்தியாவின் பணக்காரா்கள் பட்டியலில் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 ஆசியா, இந்தியாவின் பணக்காரா்கள் பட்டியலில் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்தாா்.

கடந்த ஒரு மாதகாலமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை சிறப்பான ஏற்றம் பெற்றதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.7.74 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.7.66 லட்சம் கோடியாக உள்ளது.

சா்வதேச பணக்காரா்கள் வரிசையில் அம்பானியும், அதானியும் முறையே 8 மற்றும் 9-ஆவது இடங்களில் உள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் அம்பானியை அதானி பின்னுக்குத் தள்ளினாா். இப்போது முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா்.

ஃபுளும்பா்க் ஊடக குழுமம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.