முகப்பு
இந்தியா

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1%-ஆக குறைப்பு

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
இந்தியாவின் உயா் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2 ஆண்டுகளாக அச்சிடப்படவில்லை
பகிர்:

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் வருவங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.