பாஜகவிற்கு படையெடுக்கும் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் 
இந்தியா

பாஜகவிற்கு படையெடுக்கும் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள்

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் நான்கு முன்னாள் அமைச்சர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

DIN

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் நான்கு முன்னாள் அமைச்சர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

சமீப காலங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு பிரமுகர்களும் பாஜகவில் இணைந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனர்.

சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான ராஜ் குமார் வெர்கா, பல்பீர் சிங் சித்து, குர்ப்ரீத் சிங் கங்கர், மற்றும் சுந்தர் சாம் அரோரா ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

மேலும் காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான பர்நாலா கேவல் சிங் தில்லோன் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான சரூப் சந்த் சிங்லா மற்றும் கெளர் ஜோஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

ஏற்கெனவே அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்திருந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்ட நிலையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; முஸ்தஃபிசுர் ரஹ்மானை முந்திய நியூசி. வீரர்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜென் ஸி தலைமுறையிடையே ஆதிக்கம் செலுத்துகிறாரா ராகுல்? பிரஷாந்த் கிஷோர் பதில்

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!

படிநிலைகள்... அமலா பால்!

SCROLL FOR NEXT