இந்தியா

வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN

புது தில்லி: வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 2-3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்  என்று இந்திய வானிலை ஆய்வு மையம்   கணித்துள்ளது.

கோடை காலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. தில்லியில் கடந்த மே மாதம் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. 

'ரெட் அலர்ட்' எனப்படும் சிவப்பு நிற எச்சரிக்கையை ராஜஸ்தான் மாநிலம் மற்றும் தில்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

இந்த நிலையில், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT