நாட்டில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,270 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,619 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 4,26,28,073 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,692 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 24,052 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
மேலும் 11,92,427 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,94,09,46,157 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.