இந்தியா

இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாதா? தீர்ப்பு சொல்வது என்ன?

DIN


குவகாத்தி: இந்து திருமண சட்டத்தில், இரண்டாவது மனைவி என்ற வாதம் கிடையாது என்பதால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற அதிகாரம் இல்லை என்று குவகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2016ஆம் ஆண்டு அரசு ஊழியரான பிரேன் டேகா என்பவர் உயிரிழந்தார். அவரது இரண்டாவது மனைவி பிரதிமா தேகா, குடும்ப ஓய்வூதியம் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை பிரெனின் முதல் மனைவி கோலபி தேகா எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி, இந்த திருமணச் சட்டத்தில் இரண்டாவது மனைவி என்ற கருத்துக்கு இடமில்லை. அதே போல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இரண்டாவது திருமணம் என்பது குற்றமாகக் கருதப்படும். அதன் அடிப்படையில் விவகாரத்தும் கோரலாம். எனவே, இந்த வழக்கில் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில், இரண்டாவது மனைவியின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, முதல் மனைவி இருக்கும் போது, குடும்ப ஓய்வூதியம் பெற இரண்டாவது மனைவிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT