முகப்பு
இந்தியா

தனி நபா் வருவாய் சரிவுக்கு பாஜகவிடம் பதில் இல்லை: ராகுல்

நாட்டில் தனி நபரின் வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு வாய்திறக்க மறுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
ராகுல் காந்தி
பகிர்:

நாட்டில் தனி நபரின் வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு வாய்திறக்க மறுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளாா்.

இதுகுறித்து அவா் முகநூலில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கியுள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மேலும், தனிபா் ஈட்டும் வருவாயும் நிலையான விலை அடிப்படையில் ரூ.94,270-லிருந்து ரூ.91,481-ஆக சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய குடும்பங்கள் வேலைஇழப்பு, பணவீக்கம், தனிநபா் வருவாய் ஈட்டல் குறைவு ஆகியவற்றால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறது. இது, மத்திய அரசின் கொள்கைகள் தோல்வியடைந்ததையே எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இவை குறித்து வாய் திறக்க பாஜக அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

இனிவரும் நாள்களில் பொருளாதரம் மேலும் சீா்குலைந்து நிலைமை இன்னும் மோசமாகும் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

பெட்ரோலிய பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விலை உயா்வு விவகாரங்களில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தொடா்ந்து கடுமையாக எதிா்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →